1868 ஆம் ஆண்டில் அடையாளங்காணப்பட்ட அருகிவரும் மரத்தை பாதுகாக்க நடவடிக்கை - சி.பி.ரத்நாயக்க

Published By: Digital Desk 4

18 Feb, 2021 | 10:01 PM
image

(நா.தனுஜா)

அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய நிலையிலிருந்த உலகிலேயே மிகவும் அருகிவரும் மரத்தை பாதுகாப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Image result for சி.பி.ரத்நாயக்க

உலகளாவிய ரீதியில் அருகிவரும் இந்த மரம் முதன்முதலில் 1868 ஆம் ஆண்டில் அடையாளங்காணப்பட்டதுடன் 1911 ஆம் ஆண்டில் பின்னர் அது எங்கும் கண்டறியப்படவில்லை.

இந்தத் தாவரம் முழுமையாக அழிந்துவிட்டதாக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டில் கொழும்பில் இதனையொத்த மரமொன்று இனங்காணப்பட்டது.

எனினும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளுக்காக அந்த மரம் வெட்டப்பட இருந்த நிலையில், நாட்டிலுள்ள சூழலியலாளர்களும் அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதனைத்தொடர்ந்து அந்த மரம் வெட்டப்படாது என்றும் நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் அதனூடாக முன்னெடுக்கப்படும் என்றும் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும்...

2024-04-18 16:57:33