தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும்: இந்து மதத் தலைவர்கள்

Published By: J.G.Stephan

18 Feb, 2021 | 02:58 PM
image

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு எனவும் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர், நல்லை ஆதினத்துக்கு நேற்று மாலை சென்றிருந்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரம்ம ஸ்ரீ கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர், கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் ஆகியோர் சுவிஸ்சர்லாந்து தூதுவரைச் சந்தித்தனர்.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் சுவிஸ்சர்லாந்து தூதுவர் இந்து மதத் தலைவர்களைக் கேட்டறிந்தார். 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்து உரிமைகளை வழங்கியுள்ள சுவிஸ்சர்லாந்துக்கு நன்றிகள் தெரிவிப்பதாகவும், அவர்கள் தமது மத வழிபாடுகளுக்கு ஆலயங்களை அமைக்க அனுமதித்துள்ளமையும் பாராட்டுக்குரியது என இந்து மதத் தலைவர்கள் தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் சகல உரிமைகளையும் கிடைக்க சுவிஸ்சர்லாந்து ஒத்துழைக்கவேண்டும் என்றும் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41