பாவனையாளர்களுக்கு சிறந்த கமரா : OPPO இடமிருந்து 16 MP “Selfie Expert” F1s அறிமுகம்

Published By: Robert

11 Aug, 2016 | 11:49 AM
image

வேகமாக பிரபலமடைந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான OPPO, தனது F1s கையடக்க தொலைபேசியை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது.

தனது F தொடரில் புகைப்படமெடுப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கையடக்க தொலைபேசி, இலங்கையிலும், ஏனைய தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த மாதிரியைப் போன்று ‘Selfie Expert’ எனும் தலைப்புடன், 16 MP முன்புற கமராவை கொண்டுள்ளது. இந்த கையடக்க தொலைபேசி, செல்பி புகைப்படமெடுத்தலில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் OPPO வின் முன்னணி புகைப்படமெடுக்கும் தொழில்நுட்பம் பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில், OPPO வின் வர்த்தக நாமத் தூதுவர் சோனம் கபூர் கலந்து கொண்டிருந்ததுடன், சகல துறை கிரிக்கெட் விளையாட்டு வீரரும், இடது கைத்துடுப்பாட்ட வீரருமான யுவராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

F1s sports என்பது 13 MP பின்புற கமராவையும், வேகமான பிங்கர்பிரின்ட் ரீடர், 3075 mAh திறன் கொண்ட பற்றரி, 32GB ROM மற்றும் ட்ரிப்பில் ஸ்லொட் கார்ட் ட்ரே ஆகியவற்றை கொண்டுள்ளது. F1 என்பது அறிமுகம் செய்யப்பட்டது முதல் புகழ்பெற்றுத் திகழ்வதுடன், பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த புகைப்பட அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் என OPPO உப தலைவரும், சர்வதேச மொபைல் வியாபாரத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான ஸ்கை லீ தெரிவித்தார். “10 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் F1 மற்றும் F1 Plus ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள F1s என்பதும் இதே போன்று பெருமளவு வரவேற்பைப் பெறும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

துறைக்கு OPPO வழங்கும் அர்ப்பணிப்பாக, F1s அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன் கமராக்களை பயன்படுத்துவதை 2011 இல் ஆரம்பித்த OPPO, உலகின் முதல் சுழலும் கமராவைக் கொண்ட கையடக்க தொலைபேசியான N1 ஐ 2013 இல் அறிமுகம் செய்திருந்தது.

செல்பி கலை

செல்பிக்களில் பெருமளவான பிரச்சினைகளாக, அழகின்மை, மற்றும் இயற்கை தோற்றமின்மையாக அவை தென்படும். OPPO F1s அவற்றை இல்லாமல் செய்து, தற்போது புதிய “Selfie Expert” ஆக அமைந்துள்ளது. F1s என்பது அழகிய, இயற்கையான தோற்றத்தை வழங்கக்கூடிய செல்பிக்களை எடுக்கக்கூடிய வகையிலும், குறித்த விலை கட்டமைப்பில் 16 MP முன்புற கமராவை வழங்கும் முதலாவது தொலைபேசியாகவும் அமைந்துள்ளது. முன்புற மற்றும் பின்புற கமராக்கள் இரண்டும் Beautify 4.0 எனும் - செல்பி படங்களை மேம்படுத்தும் app ஐ கொண்டுள்ளது. இந்த app இன் மூலமாக, ஏழு கட்ட அழகாக்கல் மற்றும் இரு நிலை சரும வர்ண மாதிரிகள் போன்றன வழங்கப்படுகிறது. எனவே. பாவனையாளர்களுக்கு அவர்களின் தோற்றத்துக்கு மிகவும் பொருத்தமான கட்டமைப்புகளை பெற்றுக் கொள்ளலாம். நூற்றுக் கணக்கான பாவனையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அழகியல்படுத்தல் குறிப்புகள் மெருகேற்றம் செய்யப்பட்டிருந்தன. 16 MP அழகியல் கமராவில் 1/3.1 அங்குல உணரி அடங்கியுள்ளதுடன், பெரிய f/2.0 aperture  காணப்படுகிறது. இதன் மூலம் சிறந்த காட்சி பெறப்படுவதுடன், தோற்றங்களில் தடங்கல் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.

OPPO வின் பிரத்தியேகமான உள்ளம்சங்களுடன் காணப்படும் F1s இனால் vivid செல்பிக்கள் சிறந்த தரவுகளுடன் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சாதனம் மேம்படுத்தப்பட்ட ஸ்கிரீன் பிளாஷ் செயற்பாட்டை கொண்டிருப்பதுடன், தற்போதைய ஒளி நிலைகளுக்கு பொருந்தும் வகையில் சுயமாக மாறக்கூடியது. இதன் மூலம் பாவனையாளர்களுக்கு குறைந்த வெளிச்சத்திலும் அழகிய செல்பிக்களை எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். குறிப்பாக வைபவங்களின் போது செல்பிக்களை எடுப்பது என்பது மிகவும் எளிமையானதாக அமைந்திருக்கும்.

F1s இல் காணப்படும் 13MP பின்புற கமரா, 1/3 அங்குல பின்புறம் ஒளியேற்றக்கூடிய உணரியை கொண்டுள்ளது. அத்துடன் f/2.2 aperture என்பதை கொண்டுள்ளதுடன், உயர் வெளிச்சத்தில் தெளிவான படங்களை எடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த உள்ளம்சங்கள் மற்றும் PDAF எனும் கமராக்களுக்கான உயர் தொழில்நுட்பங்களுடனும் F1s என்பது தெளிவான, கண்கவர் vivid படங்களை எடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

F1s என்பதிலுள்ள பிரத்தியேகமான புகைப்பட கட்டமைப்பினூடாக நடைமுறைச் சாத்தியமான பல உள்ளம்சங்கள் வழங்கப்படும். பின்புற கமராவின் பனரோமா நிலையைப் போன்று, முன்புற செல்பி பனரோமா அம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘Palm Shutter’ ஐ செயற்படுத்துவதன் மூலமாக செல்பிக்களை தன்னியக்கமாக செயற்படுத்த முடியும். அதாவது சைகை அல்லது ‘Voice Shutter’ மூலமாக “சீஸ்” என குறிப்பிடுவதன் மூலம், பாவனையாளர்களுக்கு தமது படங்களை சரியான முறையில் எடுத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். shutter பொத்தானை அழுத்துவதன் மூலமாக அநாவசியமான ஆட்டங்களை தவிர்த்துக் கொள்ள முடியும். 

அதிவேகமான தொடுகை திறன், Fingerprint  புதிய செயற்படுத்தப்பட்ட App அறிமுகம்

F1s இல் காணப்படும் home-button fingerprint ரீடர் மூலமாக, 0.22 செக்கன்கள் எனும் குறுகிய நேரத்தில் தொலைபேசியை unlock செய்ய உதவும். இந்த விலைத் தெரிவில் காணப்படும் வேகமான fingerprint ரீடராக இது அமைந்துள்ளது.

fingerprint ரீடர் என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள உள்ளம்சமான fingerprint செயற்படுத்தப்பட்ட அழைப்பு மற்றும் app திறப்பு ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பாவனையாளர்கள் 5 வெவ்வேறு fingerprint களை பதிவு செய்து, தமது தெரிவின் பிரகாரம் அப்ளிகேஷன்களையும் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். வெவ்வேறு விரல்களை பயன்படுத்தி கையடக்க தொலைபேசிளை unlock செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யப்பட்ட app அல்லது அழைப்பு தன்னியக்கமாக மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பல app கள் மத்தியிலிருந்து தேவையானதை தேடிக் கொள்வது, பல தொடர்புகளிலிருந்து அவசியமானவரின் விவரங்களை பெறுவதற்கு செல்லும் கால விரயம் தவிர்க்கப்படும்.

மிருதுவான, துரிதமான, நீண்ட காலம் நிலைத்திருக்கும் வினைத்திறன்

F1s என்பது octa-core 64-bit புரொசசரில் இயங்குகிறது. இது 3 GB RAM மற்றும் 32 GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளது. firmware ஐ பொருத்தமட்டில், முன்னோடியாகவும், வேகமானதாகவும், மிருதுவானதாகவும் துரிதமானதாகவும் அமைந்துள்ளது. ColorOS 3.0 என்பது F1s பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளை ஒரே வேளையில் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ColorOS 3.0 இல் நூற்றுக் கணக்கான பொது அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த வேகம் மற்றும் வினைத்திறனை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

F1s இலுள்ள பிரதான அனுகூலங்களில், பற்றரி 3075 mAh காணப்படுகிறது. இதன் வினைத்திறன் என்பது ColorOS 3.0 எனும் நவீன வலுச்சிக்கனமான கட்டமைப்பினால் வலுவூட்டப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் போது F1s சுமார் 14 மணித்தியாலங்கள் இயங்கக்கூடியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பளபளப்பான, கண்கவர் வடிவமைப்பு

அலங்காரத்தைப் பொறுத்தமட்டிலும் OPPO ஒப்பற்றதாக அமைந்துள்ளது. F1s இல் 5.5 அங்குல, 2.5D Corning Gorrilla Glass 4 திரை காணப்படுகிறது. பாதுகாப்பான திரையின் மூலமாக சிறந்த தோற்றம் வழங்கப்படுவதுடன், நீடித்த உழைப்பும் சேர்க்கப்படுகிறது. தொலைபேசியின் அலுமினிய பின்புறத்தில் காணப்படும் இரு கோடுகளின் மூலமாக, பளபளப்பான, கண்கவர் தோற்றம் சேர்க்கப்படுகிறது.

OPPO F1s என்பது, சந்தையில் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. OPPO காட்சியறைகள் அமைந்துள்ள தெஹிவளை, (011-22717302)இ மொரட்டுவ (011 - 2645402)இ நீர்கொழும்பு (031 -2222171)இ காலி (091- 3120959) மற்றும் இரத்தினபுரி (045-2233744) மற்றும் நாடு முழுவதையும் சேர்ந்த அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

OPPO பற்றி

OPPO உலகில் முன்னணி வகிக்கும் ஒரு வர்த்தக முத்திரையாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களின் வாடிக்கையாளர்களை தரமான உற்பத்திகள் மூலம் கவருவதை இலக்காகக் கொண்டு, அதன் உற்பத்திகள் அமைந்துள்ளன. OPPO அதன் சொந்த உற்பத்திகளை வடிவமைத்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றது. உன்னதமான வடிவமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்களும் இணைந்ததாக இந்த உற்பத்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எமது வாடிக்கையாளர்கள் தரமான, சிறந்த உற்பத்திகளைப் பெற வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

2004 இல் ஸ்தாபிக்கப்பட்ட OPPO விரிவான விளக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால், சந்தையில் பிரத்தியேகமான இடத்தைப் பெற்றுள்ளது. பாவனையாளர்களின் விஷேட தேவைகளை ஈடுசெய்யும் வகையில் மிக நுணுக்கமாகத் தெரிவு செய்யப்பட்ட பண்புகளை உள்ளடக்கியதாகவே ஒவ்வொரு OPPO உற்பத்திகளும் அமைந்துள்ளன. கண்கவர் வடிவமைப்புக்களையும், தாக்கத்தை ஏற்படுத்தும் பண்புகளையும் உள்ளடக்கியதாகவே இவை அமைந்துள்ளன. 2008 இல் நடமாடும் தொலைபேசி சந்தைப் பிரிவில் இணைந்த பின்னர் OPPO  ஒரு வருடம் கழிந்துகடல் கடந்த நாடுகளிலும் அதன் சந்தை வாய்ப்புக்களை விஸ்தரித்தது. தற்போது 20 நாடுகளின் சந்தையில் OPPO உற்பத்திகள் கிடைக்கின்றன.மேலும் 50 நாடுகளில் இணைய வழி விற்பனையையும் கொண்டுள்ளது. 2015 ஏப்ரல் வரை OPPO 116 நாடுகளில் தனது உற்பத்திகளைப் பதிவு செய்துள்ளது.

OPPO அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. வடிவமைப்பில் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் எமக்குள்ள தீராத பற்று காரணமாக, கட்புல செவிப்புல சந்தையில் ஒரு பாரிய தாக்கத்தை OPPO ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலும், ஐரோப்பா முழுவதும் உலகப் பிரசித்தி பெற்ற முன்னணி ஓடியோ காட்சி சந்தையில் அது வழங்கி வருகின்றது. மேலதிக விவரங்களுக்கு http://www.oppo.com/en/ என்ற இணையத்துக்கு விஜயம் செய்யவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58