டோக்கியோ ஒலிம்பிக் தலைவர் பதவியை ஏற்கத் தயாராகும் ஜப்பானிய ஒலிம்பிக் அமைச்சர்

Published By: Vishnu

18 Feb, 2021 | 10:08 AM
image

டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பதவியினை டோக்கியோ விளையாட்டுக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சரும், முன்னாள் ஒலிம்பிக் தடகள வீராங்கனையுமான சீகோ ஹாஷிமோடோ ஏற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளார்.

தனது பாலியல் கருத்துக்களினால் கடந்தவாரம் குறித்த பதவியினை 83 வயதான யோஷிரோ மோரி இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை ஹாஷிமோடோ மேற்கொண்டுள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

1964 கோடைகால விளையாட்டுகளை ஜப்பான் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த ஹாஷிமோடோ நான்கு குளிர்கால ஒலிம்பிக்கில் வேக ஸ்கேட்டராகவும், மூன்று கோடைகால ஒலிம்பிக்கில் சைக்கிள் ஓட்டுநராகவும் பங்கேற்றார்.

ஜப்பானின் ஆளும் கட்சியான 56 வயதான ஹாஷிமோடோவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதுடன் ஒலிம்பிக் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்,

முன்னதாக மோரிக்கு பதிலாக ஜப்பான் கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பான் ஒலிம்பிக் மேயருமான சபுரோ கவாபுச்சி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

84 வயதான கவாபுச்சி, 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பானை கால்பந்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் ஜப்பான் தென் கொரியாவுடன் 2002 ஃபிஃபா உலகக் கிண்ணத்தை இணைந்து நடத்த உதவியவரும் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35