மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான  மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.

2013 டிசம்பர் முதல் இதுவரையில் இரண்டு தடவை அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தில் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இந்த தடையை விதித்துள்ளது. 

சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.