அனைத்து பிரஜைகளுக்கும் வேறுபாடின்றி குடிநீரை வழங்க நடவடிக்கை - சனத் நிசாங்க

Published By: Digital Desk 4

15 Feb, 2021 | 08:27 PM
image

இன, மத, மொழி, கட்சி ,குல வேறுபாடின்றி  குடிநீர்ப்பிரச்சினையை முகங்கொடுக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்ட அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (14)நடைபெற்ற குடிநீர் பிரச்சினைகளை ஆராயும் நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

எதிர்வரும் 5 வருடங்களில் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாத பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பு எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு சவால்மிக்க விடயமாகும். இருப்பினும் அச்சவாலினை பொறுப்பேற்று மக்களது தேவைகளை நிறைவேற்ற நாம் உரிய செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டுவருகின்றோம்.இம்மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அதிக சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். 

இதற்கு மூல காரணம் தூய குடிநீர் இல்லையென்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள கூறினார்.எனவே இதனை முக்கிய விடயமாக கருத்திற்கொண்டு உரிய குடிநீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.மக்கள் குறித்த பிரச்சினைகளை தமக்கு உரிய மாவட்ட அரசியல் தலைமையின் சிபாரிசுடன் முன்வைக்கவும்.அதற்கான நிதியை தான் பெற்றுத்தருகின்றேன்.

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் மூலம் குடிநீர்வசதியற்ற கிராமங்களின் குடிநீர்த்தேவை எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். மக்கள் வழங்கப்படும் குடிநீர் வழங்கல் திட்டத்தை பொறுப்புடன் பராமரித்த்ல் வேண்டும்.

அவற்றை முறையாக உரிய அதிகாரிகள் கண்காணித்தல் வேண்டும். கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல குடிநீர் வழங்கல் திட்டம் முறையான திட்டம் மற்றும் பராமரிப்பின்மையால் தற்போது செயல் இழந்து காணப்படுகின்றது.

இது எவ்வித ஆய்வுகள் இன்றி உடன் கடந்த அரசாங்கத்தில் ஏற்படுத்ப்பட்டதன் பிரதிபலனே.மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைதல் இன்றியமையாயதது என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மக்கள் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பான பல விடயங்களை இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவை யாவும் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது மக்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள ,  அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள ,  பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04