யாழில் சிசுவை வீதியில் விட்டு சென்ற பெண் கைது

Published By: Raam

10 Aug, 2016 | 07:35 PM
image

யாழில் பிறந்து பத்தே நாள் ஆனா ஆண் குழந்தையை வீதியில் விட்டு சென்ற தாயை இளவாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 7ம் திகதி  யாழ்.இளவாலை வடலியடைப்பு பகுதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தை அநாதரவான நிலையில் கடதாசி பெட்டி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. 

வடலியடைப்பு பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு அருகில் கடதாசி  பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பிள்ளை ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட குழந்தை தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு,பின்னர் அங்கிருந்து  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிசார் சிசுவின் தாயாரை இன்று கைது செய்துள்ளனர். 

அளவெட்டியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய பெண்ணே அவ்வாறு கைது செய்யபட்டு உள்ளார்.

தன்னுடைய கணவர் இந்த சிசு தனக்கு  பிறக்கவில்லை எனவும் , வேறு நபருடன் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் பிறந்த சிசு என என்னுடன் சண்டை இட்டமையால் என் குழந்தையை கடதாசி பெட்டியில் வைத்து வீதியில் விட்டு சென்றேன் இளவாலை பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் பொலிசார் அனுமதித்து உள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27