இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடி பொதிகள் பறிமுதல்

Published By: Digital Desk 3

15 Feb, 2021 | 04:48 PM
image

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பொதிகள்  சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில்  தொடர்புடையவர்களை கடலோர காவல் குழும பொலிஸார் தேடி வருகின்றனர். 

நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து மூக்குப்பொடிகள் இலங்கைக்கு கடத்த இருந்த சம்பவம் உளவுத்துறை மற்றும் கடலோரா பாதுகாப்பு குழும அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை  குயவன் தோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு மூக்கு பொடி பொதிகள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்க்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து வேதாளை கடற்பகுதியில்  ரோந்து மேற்கொண்டனர். 

அப்போது வேதாளை குயவன் தோப்பு கடற்கரையில்  சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்ய முற்பட்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் இரண்டு பண்டல்களை கடற்கரையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றனர்.

இதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெரிய பொதிகளை கை பற்றாமல் கடத்தல்காரார்கள் மீண்டும் அந்த பொதிகளை எடுக்க வந்தால் அவர்களை பிடிக்க கடற்கரையில் சுங்கத்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் மறைந்திருந்தனர்.

அதிகாலை வரை பொதிகளை எடுக்க யாரும் வராததால் கடற்கரையில் கிடந்த  2 பெரிய  பொதிகளை கைபற்றிய மண்டபம்; சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு  எடுத்து வந்தனர். கைப்பற்றப்பட்ட 2 பொதிகளில் 100 அட்டைபெட்டிகளில் சுமார் 30 கிலோ  மூக்கு பொடிகள் இருந்துள்ளது.

மேலும் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் தப்பி சென்ற  இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை மண்டபம் கடலோர காவல் குழுமம் மற்றம் உளவுத்துறை அதிகதாரிகள் கடற்கரை ஓர கிராமங்களில் தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41