மூன்று  இலட்சம் டொலர்களை வைப்பிலிடும்  வெளிநாட்டவருக்கு  10 வருட கால வதிவிட வீசா  : அரசாங்கம் அறிவிப்பு

Published By: MD.Lucias

10 Aug, 2016 | 04:24 PM
image

இலங்கையில் 3 இலட்சம்  டொலர்களை  வைப்பு  செய்யும்  வெளிநாட்டவர்களுக்கு  10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது  என்று  அமைச்சரும்  அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை வழங்க 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. 

அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தின் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை இங்கு வைப்பிலும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வதிவிட விசாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ,

 அதற்காக குறித்த தொகையினை 10 வருட காலத்துக்கு குறித்த சிறப்பு வைப்புக்கணக்கில் பேண வேண்டும். அவ்வாறு வெளிநாட்டவர் இங்கு தங்கியிருக்கும்போது    எந்தத் தொழிலையும் செய்ய முடியாது.  பல நன்மைகளை கொண்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர்  ரவி கருணாநாயக்கவினால்   முன்வைக்கப்பட்ட யோசனைக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39