தமிழர்களை கொத்தடிமைகள் போன்றே அரசு நடத்துகின்றது - வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்

Published By: Digital Desk 3

13 Feb, 2021 | 08:02 PM
image

(நா.தனுஜா)

பொத்துவில் - பொலிகண்டி  பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுவது எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

ஏனென்றால் அனைவரும் இலங்கையர்கள் என்று அரசாங்கம் வெறுமனே வாய்வார்த்தையில் கூறினாலும், உரிமைகளைப் பொறுத்தவரையில் எம்மை வேற்றுநாட்டவர்கள் போன்றும் கொத்தடிமைகள் போன்றுமே நடத்துகின்றார்கள் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் நீலாதேவி தெரிவித்தார்.

பேரணியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்த நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி மேலும் கூறியதாவது,

பேரணியில் கலந்துகொண்டமைக்கான நடவடிக்கை என்ற அடிப்படையில் இதுவரையில் எமக்கு எந்தவொரு நீதிமன்ற உத்தரவும் வரவில்லை.

எனினும் சுதந்திரதினத்தைக் கரிநாளாகக்கருதி அன்றைய தினம் நாங்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம். அந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்திருந்தமையால், அதில் கலந்துகொண்டமைக்காக வவுனியா நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுவது எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

ஏனென்றால் எமது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டமைக்கான வாழும் சாட்சிகளாக நாங்கள் இருக்கும்போதே, யாரும் காணாமல்போகவில்லை என்று கூறுபவர்கள் எமக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவதில் ஆச்சரியமில்லை.

ஏனென்றால் அனைவரும் இலங்கையர்கள் என்று அரசாங்கம் வெறுமனே வாய்வார்த்தையில் கூறினாலும், உரிமைகளைப் பொறுத்தவரையில் எம்மை வேற்றுநாட்டவர்கள் போன்றும் கொத்தடிமைகள் போன்றுமே நடத்துகின்றார்கள்.

உண்மையில் இந்நாட்டில் பெரும்பான்மையின சிங்களவர்களுக்கு மாத்திரமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அது எமக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் சர்வதேச சமூகம் இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றது என்பதே எமது தற்போதைய கேள்வியாக இருக்கின்றது என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09