உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை அறிக்கை பொதுபல சேனாவிடம் கையளிக்கப்பட வேண்டும்: பொதுபல சேனா 

Published By: J.G.Stephan

13 Feb, 2021 | 01:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாரம்சத்தை பொதுபலசேனா அமைப்பிற்கு வழங்க வேண்டும். அல்லது பொதுபல சேனா அமைப்பு குறித்து பிரதான நிலை ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி குறித்து ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுபல சேனா அமைப்பின் ஊடக செயலாளர் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் கடந்த 2019.04.21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து  விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கையில் பொதுபல சேனா அமைப்பு மற்றும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதான  ஊடக சேவை தலைப்புச்செய்தியில் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கோ, ஏனைய தரப்பினருக்கோ இதுவரையில் வழங்கப்படவில்லை. எமது அமைப்பு குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளமை பொதுபல சேனா அமைப்பிற்கு இழைக்கும் அநீதியாகவே கருத முடியும்.

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் பிரதான ஊடகத்தில் வெளியாகியுள்ள  செய்தியை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே  குறித்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்செய்தி மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்தினை தோற்றுவித்துள்ளது. இவ்விடயம் குறித்து எமது அமைப்பின் சார்பில் சாட்சியங்களை பெறுவது அவசியமாகும்.

2019.04.21 ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர்  கடந்த மதம் 31 ஆம் திகதி விசாரணை அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02