புதிய பொருளாதார தடைகளை விதித்தால் உறவுகளை துண்டிக்கத் தயார் - ரஷ்யா அதிரடி அறிவிப்பு

13 Feb, 2021 | 04:03 PM
image

புதிய பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார் என்று ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கைதுசெய்து சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் ரஷ்ய அரசுக்கும் ஐரோப்பிய‌ ஒன்றியத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அவரை உடனடியாக விடுவிக்கக்கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் பொருளாதார ரீதியில் வலிமை மிகுந்த புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில்,

‘‘ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத் தடைகள்  நமது பொருளாதாரத்துக்கு அபாயங்களை உருவாக்கும். மேலும் இந்த தடைகளால் உறவுகளில் முறிவு ஏற்படக்கூடும்.

உலக விவகாரங்களிலிருந்து எங்களை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47