இலங்கையில் கொரோனாவால் 5 மரணங்கள் பதிவு : அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 4

12 Feb, 2021 | 10:28 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 74 000 ஐ கடந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 936 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 74052 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 66 984 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6281 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.

கொழும்பு 5 ஐ சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி கொவிட் நிமோனியா , நீரிழிவு நோய் மோசமடைந்தமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நரம்புதளர்ச்சி என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனையை சேர்ந்த 70 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் மற்றும் குருதி உறைவு என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 42 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி கொவிட் தொற்று , நுரையீரல் புற்று நோய் , மூச்சிழுப்பு, உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

உடதளவின்ன பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய பெண்னொருவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி கொவிட் நிமோனியா இரத்தம் நஞ்சானமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51