கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்தது

Published By: Digital Desk 4

11 Feb, 2021 | 09:40 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இறுதியாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணி வரை 939 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 73 113 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 66 211 பேர் குணமடைந்துள்ளதோடு 6124 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதனன்று பதிவான மரணங்கள்

நேற்று புதன்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 5 ஐ சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , இதய நோய் மற்றும் பக்கவாதம் இவரது மரணத்திற்கான காரணமாகும்.

வத்தளையை சேர்ந்த 51 வயதுடைய பெண்னொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமை மரணத்திற்கான காரணமாகும்.

அழுத்கம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இரத்தம் நஞ்சானமை , சிறுநீரக நோய் மற்றும் கொவிட் நிமோனியா நிலை மரணத்திற்கான காரணமாகும்.

கம்பஹாவை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய ஆணொருவர் இரணவில வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00