சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்கிறார் சிறிதரன்

Published By: Digital Desk 3

12 Feb, 2021 | 11:22 AM
image

(நா.தனுஜா)

குருந்தூர் மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த அஷ்டதார லிங்கத்தை ஒத்திருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலைப் பகுதியில் நேற்று புதன்கிழமை சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எஸ்.சிறிதரன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அப்பதிவில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தார லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அது பல்லவர்கால கட்டட வடிவமைப்புக்களின் சாட்சியாக இந்த அஷ்டதார லிங்கம் விளங்குகின்றது.

ஈழத்தின் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலில் தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அஷ்டதார லிங்கத்தை ஒத்த லிங்கம், தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயத்திலும் உள்ளது. குருந்தூர் மற்றும் கூந்தூர் ஆகிய பெயர்களும் ஒத்தவையாக உள்ளன என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38