மீண்டும் இலங்கை அணியுடன் இணைகிறார் சமிந்த வாஸ்

Published By: Ponmalar

10 Aug, 2016 | 03:47 PM
image

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

சமிந்த வாஸ் இந்த மாத இறுதிக்குள் அணியுடன் இணைந்தக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (10) இலங்கை கிரிக்கட் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

சமிந்த வாஸ்  19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி,  இலங்கை ஏ அணி, மற்றும் பிராந்திய அணிகள் என்பவற்றுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்குவதுடன், தேசிய கிரிக்கட் அணி உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிரிக்கட் அணிகளுக்குமான  பந்துவீச்சு ஆலோசனையை வழங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு மிகவும் வீழ்ச்சிக் கண்டுள்ள நிலையில், அதனை  இளம் வீரர்களடமிருந்து கட்டியெழுப்புவதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59