சமுத்திரகனியின் 'சங்கத் தலைவன்' அப்டேட்

11 Feb, 2021 | 02:54 PM
image

சமுத்திரகனி நடிப்பில் தயாராகியிருக்கும் 'சங்கத்தலைவன்' இம்மாதம் 26 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'உதயம் NH4 ','புகழ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரான மணிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சங்க தலைவன்'. இப்படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கருணாஸ், மாரிமுத்து, சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் 'சங்கத்தமிழன்' படத்தை ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, றொபட் சர்குணம் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய சொந்த பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இம் மாதம் 26 ஆம் திகதியன்று  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமுத்திரக்கனி சிவப்பு சிந்தனையாளராக நடித்திருக்கும் இப்படத்திற்கு திரை உலகில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35