சட்டவிரோதமான முறையில் ஆடைகளை கொள்வனவு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள  3 பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுங்கத் திணைக்களத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய, புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைக்கு பின்னரே மேற்படி மூன்று பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்கள் சுங்க அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்க தவறியமையாலும் முறையான பற்றுச் சீட்டு மற்றும் வரிவிதிப்பு தொடர்பான ஆவணங்களை  வழங்க தவறியமையாலுமே கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.