தமிழில் அறிமுகமாகும் நட்சத்திர வாரிசு

11 Feb, 2021 | 02:00 PM
image

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் மூலம் டொக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகிய நட்சத்திர தம்பதிகளின் இளைய வாரிசான சிவாத்மிகா ராஜசேகர் நடிகையாக அறிமுகமாகிறார்.

'ஒரு கல்லூரியின் கதை', 'மாத்தி யோசி', 'ஜிகினா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இயக்குனரும், நடிகருமான சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரபல நட்சத்திர தம்பதிகளான டொக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் இளைய வாரிசு சிவாத்மிகா  நடிக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிகை சிவாத்மிகா அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' ஏதோ சில காரணங்களால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பத்தை மீண்டும் அக் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் ஒன்று சேர்க்க பாடுபடுகிறான். அவரது முயற்சி வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. இதில் உள்ளூர் கேபிள் டிவி ஒன்றின் தொகுப்பாளினியாக நடிகை சிவாத்மிகா நடிக்கிறார். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35