செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘ஹோப்” ( Hope ) விண்கலம்

Published By: Digital Desk 3

11 Feb, 2021 | 02:17 PM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  ‘ஹோப்” ( Hope ) விண்கலம் 49 கோடியே 50 இலட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, நேற்று முன்தினம் மாலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

1.3 டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்-2ஏ ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு ஆகும். அதன் நினைவாகவே இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய் அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்துள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசு விண்வெளி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“வெற்றி! நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அங்கு இது செவ்வாய் வளிமண்டலத்தின் முதல் முழுமையான படத்தை வழங்கும்.

நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை எட்டியது மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் விண்வெளி அறிவியல் துறையில் உலகளாவிய சாதனையாளர்களின் உயரடுக்கு பட்டியலில் இணைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17