சதித்திட்டத்தின் பின்னாலுள்ள மியான்மர் இராணுவத் தலைவர்கள் மீது பைடன் பொருளாதாரத் தடைகள் விதிப்பு

Published By: Vishnu

11 Feb, 2021 | 10:52 AM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மியன்மாரில் நடந்த இராணுவ சதித் தலைவர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிறைவேற்று ஆணையில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இது ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய இராணுவத் தலைவர்கள், அவர்களின் வணிக நலன்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது நேரடியாக தாக்கம் செலத்துகிறது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய பைடன், 

இன்று, சதித்திட்டத்தின் தலைவர்கள் மீது விளைவுகளை சுமத்தத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை நான் அறிவிக்கிறேன். 

பர்மிய (மியான்மர்) அரசாங்கத்தில் ஒரு பில்லியன் டொலர்களை ஜெனரல்கள் முறையற்ற முறையில் அணுகுவதைத் தடுக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

அத்துடன் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை ஜனாதிபதி ஜோ பைடன் கண்டித்ததுடன், இராணுவ சதித் தலைவர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை சுமத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றும், இந்த முயற்சியில் ஏனைய நாடுகளும் தங்களுடன் இணையுமாறு அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

அதேநேரம் ஆங் சான் சூகி மற்றும் ஜனநாயக அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்குமாறும், இராணுவ அதிகாரத்தை கைவிட்டு தேர்தலில் மக்களின் விருப்புக்கு மரியாதை கொடுக்குமாறும் பர்மிய இராணுவத்திடம் வலியுறுத்தினார்.

1990 களில் ஒரு அடக்குமுறை இராணுவ அரசாங்கம் நாட்டை ஆண்ட மியான்மர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2016 இல் அந்தத் தடைகளை நீக்கிவிட்டார்.

மியான்மரின் இராணுவம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பைத் தொடங்கி அரச ஆலோசகர் ஆங் சான் சூகி, வின் மைன்ட் மற்றும் ஜனநாயகத்திற்கான பிற தேசிய லீக் (என்எல்டி) உறுப்பினர்களை தடுத்து வைத்தது.

2020 நவம்பர் 8 பொதுத் தேர்தலின்போது வாக்காளர் மோசடிக்கு எதிராக "நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதியளித்த இராணுவம் நாட்டில் ஒரு வருட அவசரகால நிலையை அறிவித்தது, இது சூ கியின் என்.எல்.டி. கட்சி மகத்தான வெற்றியைப் சதித் திட்டத்தின் மூலம் பறித்துள்ளது.

இந் நிலையில் மியன்மாரின் முக்கிய நகரங்களில் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்தபோது, பொலிஸ் படைகள் செவ்வாய்க்கிழமை 100 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்து, நேரடி சுற்றுகள் மற்றும் கலவரக் கட்டுப்பாட்டு ஆயுதங்களைச் சுட்டதன் மூலம் எதிர்ப்பாளர்களைத் தாக்கியது.

செவ்வாய்க்கிழமை இரவு யாங்கோனில் உள்ள என்.எல்.டி.யின் தலைமையகத்தை பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் சோதனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08