நியூசிலாந்து, லோர்ட் ஹோவ் தீவுக்கான சுனாமி எச்சரிக்கை இரத்து

Published By: Vishnu

11 Feb, 2021 | 07:27 AM
image

நியூ கலிடோனியா அருகே 7.7 ரிச்டெர் அளவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் லோர்ட் ஹோவ் தீவுக்கான சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் உண்டான சிறிய சுனாமி அலைகள் நோர்போக் தீவைத் தாக்கியதுடன், நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையிலிருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள லோர்ட் ஹோவ் தீவுக்கு கடல் எச்சரிக்கைகளை சுருக்கமாகத் தூண்டியது.

நியூ கலிடோனியா கடற்கரையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது டாஸ்மான் கடல் முழுவதும் சிற்றலைகளை அனுப்பியதுடன், லோர்ட் ஹோவ் தீவுக்கான கூட்டு அவுஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விரைவாக எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.

கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை இதன்போது வலியுறுத்தப்பட்டது.

எனினும் அதன் பின்னர் நிலைமைகள் சரிவர வெளியேற்றங்கள் எதுவும் தேவையில்லை என அறிவித்த அதிகாரிகள், அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு பின்னர் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையினை இரத்து செய்துள்ளனர்.

அனைத்து முக்கிய சுனாமி அலைகளும் குறிப்பிடத்தக்க தாக்கமின்றி தீவைக் கடந்து சென்றதாகவும், கடினமான மற்றும் அசாதாரண நிலைமைகள் சில காலம் தொடரக்கூடும் என்றும் லோர்ட் ஹோவ் தீவுக்கான கூட்டு அவுஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது.

வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நோர்போக் தீவு சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. அசாதாரண மற்றும் கடினமான அலைகள் பல மணிநேரங்களுக்கு கடற்கரைகளைத் தாக்கியது. இவை குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

அதனால் அவுஸ்திரேலிய நிலப்பரப்பு அச்சுறுத்தப்படவில்லை.

நியூசிலாந்து அதிகாரிகள் அதன் வடக்கு கடற்கரையில் வசிப்பவர்களை கடற்கரைகள் மற்றும் கரையோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறும் முன்னதாக வலியுறுத்தியிருந்தனர்.

ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC), நிலநடுக்கத்தின் மையப்பகுதி நியூ கலிடோனியாவின் டாடினுக்கு கிழக்கே 417 கி.மீ (258 மைல்) மற்றும் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் இருப்பதாகக் கூறியது.

முந்தைய 7.2 அளவிலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த நிலநடுக்கம், இப்பகுதியில் குறைந்தது மூன்று அதிர்வலைகளைத் தொடர்ந்து, ஒரு மணி நேர இடைவெளியில் 5.7 முதல் 6.1 வரை அளவைக் கொண்டிருந்தது.

இதனிடையே அமெரிக்க சமோவாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் அமலில் இருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கூறியதுடன், வனடு, பிஜி மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

வனுவாட்டு, பிஜி மற்றும் நியூசிலாந்தின் சில கடலோரப் பகுதிகளுக்கு சாதாரண அலை மட்டத்திலிருந்து 1 மீட்டர் (3.3 அடி) உயரத்தை எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10