மேல் மாகாண பாடசாலைகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர்  முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 4

10 Feb, 2021 | 09:49 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாவட்டத்திலுள்ள 412 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும் , திட்டமிட்டவாறு அன்றைய தினம் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் தரம் 1 தொடக்கம் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது பொருத்தமானது.

மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறுவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இதன் பின்னர் மார்ச் 15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் சுகாதார அதிகாரிகளின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து தரங்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்னர் பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் நாட்டில் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் கழுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் சிபாரிசுகளை பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களுக்கு அமைய மேல் மாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் இறுதி தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஆகும். இதற்கமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் தீர்மானத்திற்கு அமைய மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பது மிகவும் பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளில் இதற்கு அமைவாக மார்ச் 15 ஆம் திகதி திறக்கப்படும் தரம் 1 இல் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்படும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55