(க.கிஷாந்தன்)

வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற பாதையில் நடந்து செல்லுகையில் கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதன்போது மேற்படி நபர் அயலவர்களால் மீட்கப்பட்டு தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இவர் உயிரிழந்ததாக விசாரணையை மேற்கொண்டு வரும் வெலிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 உயிரிழந்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளராக கடமைபுரிந்தவர் எனவும் பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.