நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழர்கள் நிராகரிப்பு - அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு என்கிறது த.தே.கூ.

Published By: Digital Desk 4

10 Feb, 2021 | 09:37 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர்.

இதில் ஒரு தமிழர்கூட  இல்லை. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலைதான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.

Image result for தமிழ் தேசிய கூட்டமைப்பு virakesari

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சின் மாணிக்கக்கல் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த  இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 47 பேரில் 17 பேர் தமிழ் பேசுவோர் இருந்தனர்.

அதிலும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களாக தமிழர்களே இருந்தனர். தற்போதைய அரசின் ஆட்சியில் நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்கள். ஒரு தமிழர்கூட இதில்  இல்லை என்பதனை தமிழர்களினால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள மமுடியும்?

2020 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை (எஸ்.எல்.ஏ.எஸ்) நடத்தப்பட்டது. இப்பரீட்சையின்  முடிவு ஒரு வருட தாமதத்தின் பின்னர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தபரீட்சையில் 69 பேர் சித்தி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தெரிவாகியுள்ளனர் .இவர்கள் 69 பேரும் சிங்களவர்கள்.ஒரு தமிழ் பேசுபவர்கூட சித்திபெறவில்லை.

இது திட்டமிட்ட இன அழிப்பாகவே நாம் கருதுகிறோம்.  கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தி பெற்று விட்டார்கள் என்பதற்காக அந்தபரீட்சையையே நிறுத்திய நாட்டிலும் ஆட்சியிலும்தான் தமிழர்களாகிய நாம் வாழ்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08