மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் 60 வீதமான அறுவடை நிறைவு

Published By: Digital Desk 3

10 Feb, 2021 | 05:08 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020-22021 இற்கான பெரும்போக நெற்செய்கையில் இதுவரை 60 வீதமான அறுவடை நிறைவு பெற்றிருப்பதாக விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராசா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு இன்று (10.02.2021) தகவல் தெரிவித்தார்.  இப்பெரும்போக நெற்செய்கை அறுவடை இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பெரும்போகத்தில் இம்மாவட்டத்தில் 76 ஆயிரத்தி 346 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை பண்ணப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அவற்றில் 100 வீதமான நிலங்களில் நெற்பயிர் செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன் அவற்றுக்காக அரசினால் வழங்கப்படும் மானிய உரங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.

மேலும் இம்முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 11 ஆயிரத்தி 938 விவசாயிகளினது வயல்நிலங்களான 10 ஆயிரத்தி 412.5 ஹெக்டேயர் நெற்செய்கை அழிவுற்றுள்ளது. இது தவிர மீதமுள்ள 65 ஆயிரத்தி 933.5 ஹெக்டேயர் விவசாய நிலத்தில் கிடைக்கப்பெற்ற நெல் விளைச்சல்களில் 60 வீதமானவை அறவடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை இம்மாத இறுதிக்குள் அறுவடை செய்யப்படவுள்ளதாகவும் அவர் மெலும் தெரிவித்தார். 

இம்முறை கிடைக்கப்பெற்ற சராசரி விளைச்சலானது ஏக்கர் ஒன்றிற்கு 25 தொடக்கம் 30 மூடைகள் என தெரிவிக்கப்படுகிறது. 

இது தவிர அரச சுற்றுநிருபத்திற்கமைவாக இவ்வருடம் 2020-2021 பெரும்போக நெற் செய்கையின்போது எவரேனும் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) அல்லது அதற்கு அதிகமான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும்போது நெல் உரநிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நிவாரண உரங்களை 300 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவுகளில் பெற்றுக் கொள்கின்ற விவசாயிகள் தாம் அறுவடைசெய்யும் நெல்லில் ஆகக்குறைந்தது 1000 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவை அல்லது விவசாயிகளின் விருப்பப்படி அதற்கதிகமான அளவு நெல்லை அரசநெல் சந்தைப்படுத்தும் சபைக்கு கட்டாயமாக வழங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44