சிங்கள மொழியை கற்பதில் அதீத அக்கறைக் காட்டும் தமிழ் மாணவர்கள்: கல்வி அமைச்சர்

Published By: J.G.Stephan

10 Feb, 2021 | 02:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)
சிங்களம் - தமிழ் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்க வேண்டும். தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை கற்பதில் அதிகம் அக்கறை கொண்டுள்ளார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

உலர் வலயத்தில் விவசாய பயிர் செய்கையை சிறந்த முறையில் முன்னெடுக்க ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.வடக்கு மாகாணத்தில் கல்வி,விவசாயம் மற்றும் மீன்பிடிக்கைத்தொழில் ஆகிய துறைகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.

 வடக்கு மாகாணத்துக்கு கடந்த வாரம் சென்றிருந்தபோது, வடமாகாண கல்வி நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண கல்வி வலய சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணக்கமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரிய பற்றாக்குறை, ஆசிரிய பயிற்சி, தேசிய பாடசாலையாக முன்னேற்றும் திட்டம், உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டது. இரண்டு வார காலத்துக்குள் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களம் - தமிழ் ஆகிய இனங்களுக்கு மத்தியில் காணப்படும் மொழிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது அவசியமாகும். தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை கற்பதில் அதிகம் அக்கறை கொண்டுள்ளார்கள். அதற்கான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 தேசிய நல்லிணக்கம் பலப்படுத்த வேண்டுமாயின், மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வடக்கில் உள்ளவர்கள் சிங்கள மொழியையும், தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியையும் கற்க வேண்டும். வடக்கில் உள்ள மாணவர்கள் சிங்கள மொழியை கற்பதில் ஆவலாக உள்ளார்கள். மொழி திட்டத்தை அரசாங்கம் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11