'ஊடகவியலாளர்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி': அமைச்சர் கெஹெலிய

Published By: J.G.Stephan

10 Feb, 2021 | 01:54 PM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் தொடர்ச்சியாக மக்களுக்கு தகவல்களை வழங்கி வைரஸ் பரவல் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் தினமும் கூடும் கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் ஊடக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, கொவிட் பரவல் ஆரம்பித்த நாள் முதல் அது குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லல் , மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களின் சேவையால் தேசிய செயற்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லக்கூடியதாகவுள்ளமையினாலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் தரவுகளுக்கேற்ப 6,000 ஊடகவியலாளர்கள் உள்ளனர். அவர்களில் 1,150 பேர் பிரதேச ஊடகவியலாளர்களாவர். ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து அமைச்சர் ஜனாதிபதி செயலணியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனவே விரைவில் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37