''ஜனாதிபதி ஏற்றுமதி விருது” வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில்

Published By: Robert

10 Aug, 2016 | 10:44 AM
image

ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா நேற்று பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.

ஏற்றுமதித் துறைக்கு பங்களித்தவர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா இம்முறை 20வது தடவையாக நடைபெறுகிறது.

2014/2015 வருடத்திற்கான குறித்த 10 துறைகளில் 113 விருதுகள் இதன் போது வழங்கப்பட்டதுடன், அதில் 20 பேர்களுக்கான விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

வருடத்திற்கான இலங்கை ஏற்றுமதியாளர், உச்சபட்சம் தூய வெளிநாட்டு நாணயங்களை ஈட்டிய நிறுவனம், அதிக சந்தை பன்முகத்தன்மைகொண்ட ஏற்றுமதியாளர், வருடத்தின் சிறந்த இலங்கை ஏற்றுமதி வர்த்தகச் சின்னம், இந்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள சிறந்த பல்தேசியக் கம்பனி, நிலையான அபிவிருத்திக்குப் பங்களித்த சிறந்த ஏற்றுமதி நிறுவனம், ஏற்றுமதித் துறையில் அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திய நிறுவனம், பிரதேச மட்டத்தில் ஏற்றுமதித் துறைக்கு அதிக பங்களிப்புகளை செய்த ஏற்றுமதியாளர், வளர்ந்துவரும் சிறந்த ஏற்றுமதியாளர், ஏற்றுமதித் துறைக்காக சிறந்த துணை சேவை வழங்குனர் ஆகிய துறைகளில் 10 விசேட விருதுகள் மற்றும் பொருட்கள் சேவைகள் வகைகளின் கீழ் 93 விருதுகள் உட்பட 113 விருதுகள் இதன் போது வழங்கப்பட்டது. 

அமைச்சர்களான ரவீ கருணாநாயக, மஹிந்த அமரவீர, நவீன் திசாநாயக, மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரா மல்வத்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58