நோர்வூட் மைதானத்தின் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதயா அபிவிருத்தி அமைச்சரின் பெயர் விளம்பர பதாகை இனந்தெரியாதவர்களால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டினை மைதானத்திற்கு பொறுப்பான எம்.சண்முகரட்னம் என்பவர் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை இரவு கொட்டகலை நகரிலும் இவ்வாறான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பெயர் பதிக்கப்பட்ட விளம்பர பதாகை இரவு வேளையில் சேதமாக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் இரு தினங்களாக மேற்கொண்டுவரும் இந்த விளம்பர பதாகையை சேதமாக்கும் சம்பவங்கள் சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலை தொடருமானால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் விஷமிகளை கண்டறியும் நடவடிக்கையை பொலிஸார் கவனம் செலுத்தப்பட வேண்டும் பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)