நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் தினம் அறிவிப்பு

10 Feb, 2021 | 06:25 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என்பதோடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பிலுள்ள 412 பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ .எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக ஆரம்பிக்க முடியும் என பிரதேச தொடர்பு குழு அறிக்கை சமர்பித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை கோரியுள்ளோம். 

மேல்மாகாணத்தில் உள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளை  15 ஆம் திகதிக்கு பின்னர் திறக்க முடியும். ஏனைய 80  பாடசாலைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் திறக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேல்மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்க முடியும் என பிரதேச தொடர்பு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது . 

மேல்மாகாணம்  தொடர்பில் கடந்த 5 நாட்களாக பிரதேசதொடர்பு குழு கூடி அனைத்து வகுப்புக்களுக்குமான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை முழுமையாக ஆரம்பிப்பது குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.

கொழும்பு மாவட்டம்.

கொழும்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுகின்றன. கொழும்பு செயலக பிரிவில் 76 பாடசாலைகள் காணப்படுகின்றன. 

இவற்றில் 73 பாடசாலைகளையும்,திம்பிரிகஸ்யாயவில் உள்ள 54 பாடசாலையும், ஸ்ரீயவர்தனபுர கோட்டையில் உள்ள 31 பாடசாலைகளில் 29 பாடசாலைகளையும்,கொலன்னாவை பிரதேச செலயக பிரிவில் உள்ள 19 பாடசாலைகளையும்,கடுவலை பிரதேச செயலக பிரிவில் உள்ள 49 பாடசாலைகளில் 17 பாடசாலைகளையும், ஹோமாகமை பிரதேச செயலக பிரிவில் உள்ள 39 பாடசாலைகளையும், பாதுக்கை பிரதேச செயலக பிரிவில் உள்ள 26 பாடசாலைகளில் 11 பாடசாலைகளையும்,கெஸ்பேவ பிரதேச செயலக பிரிவில் உள்ள 55 பாடசாலைகளையும்,மாஹரகம பிரதேச செயலக பிரிவில் உள்ள 32 பாடசாலைகளில் 7 பாடசாலைகளையும்,தெஹிவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள 15 பாடசாலைகளையும்,இரத்மலானை பிரதேச செயலக பிரிவில் உள்ள27 பாடசாலைகளில் 24 பாடசாலைகளையும்,மொறட்டுவை பிரதேச செயலக பிரிவில் உள்ள28 பாடசாலைகளையும்  சீதாவக பிரதேச செயலக பிரிவில் உள்ள 41 பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திறக்க முடியும் என பிரதேச தொடர்பு குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள திம்பிரிகஸ்யாய, கொலன்னாவ, ஹோமாகம, கெஸ்பேவ,மொறட்டுவ, தெஹிவளை,மற்றும் சீதாவக ஆகிய 7 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் அனைத்தையும் 15 ஆம் திகதிக்கு பிறகு திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.மிகுதி 80 பாடசாலைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது..

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களுக்குட்பட்ட 590 பாடசாலைகள் உள்ளன.கம்பஹா கல்வி வலயத்தில் 154  பாடசாலைகளும்,27 பிரிவெனா பாடசாலைகளும்,களனி கல்வி வலயத்தில் 115 பாடசாலைகளும்,மீகமுவ கல்வி வலயத்தில் 135 பாடசாலைகளும்,மினுவாங்கொட கல்வி வலயத்தில் 159 பாடசாலைகளும் உள்ளன.மினுவர்ஙகொட கல்வி வலயத்தில் உள்ள  ஒரு பாடசாலையை தவிர ஏனைய பாடசாலைகளை திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்ட பாடசாலைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய வகுப்பினை இரண்டாக பிரித்துக் கொள்ள முடியும். இடப்பற்றாக்குறை காணப்படுமாயின் திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய கிழமைக்கு ஒரு தரப்பு மாணவர்களையும்,வியாழன்,வெள்ளி தேவையாயின சனி ஆகிய கிழமைக்கு பிறிதொரு தரப்பு மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்க முடியும். இதனை பாடசாலை நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

களுத்துறை மாவட்டம்

களுத்துறை மாவட்டத்தில் 446 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 442 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. மதுகம கல்வி வலயத்தில் 131 பாடசாலைகள் காணப்படுகின்றன.மதுகம நகரில் ஒரு தேசிய பாடசாலை உள்ளன.இப்பாடசாலையில் அதிக மாணவர்கள் கல்வி கற்பதால்  கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் போது விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும் அத்துடன அகலவத்தை தொகுதியில் உள்ள 16 பாடசாலைகளில்  5 பாடசாலைகளுககு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

களுத்துறை கல்வி வலயத்தில்161 பாடசாலைகள் உள்ளன.இவற்றில் 4பாடசாலைகளை தவிர ஏனைய 167 பாடசாலைகளை திறக்க முடியும். 4 பாடசாலைகளை 15 ஆம் திகதி திறக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது. என களுத்துறை கல்வி வலய காரியாலயம் குறிப்பிட்டது. ஹொரனை கல்வி வலயத்தில் 138 பாடசாலைகளும்,16 பிரிவெனாக்களும் உள்ளன இப்பாடசாலைகள் அனைத்தையும் திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைகளின் முதலாம் தவனை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்க முயும் என பிரதேச தொடர்பு குழு முன்வைத்துள்ள யோசனைக்கு சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்தவுடன் பாடசாலைகளை திறப்பது குறித்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47