கனகாம்பிகை புத்தகோயில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது

Published By: Robert

10 Aug, 2016 | 09:36 AM
image

கன­காம்­பிகை கோயி­லுக்கு அருகில் எந்­த­வி­த­மான அனு­ம­தியும் இன்றி பௌத்த விஹாரை அமைக்­கப்­ப­டு­மாயின் அது பௌத்த மதத்­திற்கு முர­ணா­ன­தாகும் என்று பேலி­ய­கொடை கங்­கா­ராம பௌத்த விகா­ரையின் விம­ல­கனே தேரர் தெரி­வித்தார்

கிளி­நொச்சி பொன்­னகர் பகு­திக்கு கம்­போ­டியா பௌத்த மத­குரு லெச் சொனான் சகிதம் வரு­கை­தந்த பேலி­ய­கொடை கங்­கா­ராம பௌத்த விகா­ரையின் மத­குரு விம­ல­கனா, அங்­குள்ள நூறு குடும்­பங்­க­ளுக்கு பேலி­ய­கொடை கங்­கா­ராம விகா­ரையின் நிதி உத­வியில் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்­கிய சிறிய பொதி­யினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்தார்.

நிகழ்வின் இறு­தியில் கன­காம்­பிகைக் கோயிலின் அருகில் ஆல­யத்தின் மூன்­றா­வது வீதி­யினை மறித்து புத்த கோயில் ஒன்று கட்­டப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

இது சம்­பந்­த­மாக பௌத்த மதத்தின் மத­குரு என்­ற­ வ­கையில் நீங்கள் என்ன சொல்­கின்­றீர்கள் என ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடுத்த கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் அவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாமும் இந்து தெய்­வங்­களை வணங்­கு­கின்றோம். ஒரு இந்துக் கோயிலின் அருகில் பௌத்த விகாரை அமைப்­பது தவ­றில்லை.

ஆனால், உங்­களால் குறிப்­பி­டப்­பட்ட கன­காம்­பிகைக் கோயி­லுக்கு அருகில் அமைக்­கப்­ப­டு­கின்ற பௌத்த விகாரை அவ் ஆலய நிர்­வா­கத்தின் அனு­மதி இன்­றியோ அல்­லது மக்­களின் விருப்­ப­மின்­றியோ, அமைக்­கப்­பட்­ட­தாயின் அது பௌத்த ஆக­மத்­திற்கு முர­ணா­னது.இக்கருத்­தினை ஊட­கங்­க­ளிற்கு என்னால் தெரி­விக்க முடி­யாது. ஆனால் இவ் விகாரை அமைப்பு சம்­பந்­த­மாக கிளி­நொச்­சியில் உள்ள பௌத்த மத­கு­ரு­வுடன் உரை­யாடி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்­டி­யுள்­ளது.

சிங்­கள மக்­க­ளுக்கே அனைத்து வச­தி­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று கூறு­கின்­றார்கள். அது உண்­மை­யல்ல.

நானும் ஒரு வறு­மை­யான பிர­தே­சத்­தில்தான் வசிக்­கின்றேன். அங்கு மக்கள் செறி­வாக வாழ்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு எது­வித உத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை.

இங்­குள்ள தமிழ்­மக்­க­ளுக்கும் அவ்­வாறே உள்­ளது. ஆனால் நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலையால் தமிழ் மக்கள் பாரிய துன்­பத்தை அனுபவித்திருப்பது உண்மைதான். தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கின்றோம். அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59