கானா பாடல் அல்பமாக உருவாகியிருக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்'

Published By: Gayathri

09 Feb, 2021 | 07:57 PM
image

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படத்தின் பாடல்கள் கானா அல்பமாக உருவாகி இருக்கிறது.

சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஏ 1' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோன்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. 

இதில் 'சட்டயரிங் ஸ்டார்' சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அனைகா சோட்டி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், பிரித்விராஜ், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி நடிகர் சந்தானம் பேசுகையில், 'இயக்குனர் ஜோன்சனுடன் இணைந்து பணியாற்றிய 'A1' என்ற படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் மீண்டும் கொமடி கலந்த கொமர்ஷல் என்டர்டைன்மென்ட் படைப்பாக 'பாரிஸ் ஜெயராஜ்' உருவாகியிருக்கிறது. 

இப்படத்திற்காக இயக்குனர் தன் குழுவுடன் இணைந்து யூனிக்கான கொமடி காட்சிகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறார்.

படத்தில் நான் கானா பாடல் பாடும் பாடகராக நடிக்கிறேன். ஏ1 என்ற படத்தின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை ஒரு காரணம் என்பதால், இந்தப் படத்திற்கும் அவரே இசை அமைத்திருக்கிறார். 

அவர் கானா பாடல் என்றதும் பாடலாசிரியர் ரோகேஷ் தவிர புது புது கானா பாடல்கள் எழுதும் இளைஞர்களுடன் இணைந்து கானா அல்பமாக இந்த படத்தின் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37