இந்தியா வெற்றி பெற 381 ஓட்டங்கள் தேவை ; போட்டியின் இறுதி நாள் இன்று

Published By: Vishnu

09 Feb, 2021 | 09:24 AM
image

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் 420 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதனால் இந்திய அணியின் வெற்றிக்கு ஒன்பது விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க இன்னும் 381 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 

சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷாத் பந்த், புஜாரா, வொஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 337 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனால் 241 ஓட்டங்கள் முன்னிலையுடன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து, இந்திய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அணி சார்பில் ஜோ ரூட் 40 ஓட்டங்களையும், ஒல்லி போப் 28 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 24 ஓட்டங்களையும், டோம் பெஸ் 25 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, ஏனைய அனைத்து வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ஷாபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, பும்ரா மற்றும் வொஷிங்டர் சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இந்தியா வெற்றிப்பெற 420 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.  முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் சொதப்பிய ரோகித் சர்மா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடிவர, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 13 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சுப்மன் கில் 15 ஓட்டங்களுடனும், புஜாரா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் இறுதி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒன்பது விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க 381 ஓட்டம் தேவை என்ற நிலை உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41