சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில்,சவுதி கூட்டுப்படை சனாவில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடந்திய விமான தாக்குதலில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இரவுப்பணியில் இருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.