பிரேஸில் வெடி விபத்தில் 4 பேர் பலி

Published By: Digital Desk 3

08 Feb, 2021 | 12:43 PM
image

பிரேஸிலின் வடகிழக்கில் அமைந்துள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே மாநிலத்தின் தலைநகரமான நடாலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் 4 பெர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடி விபத்தில் ஏழு வீடுகள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு இராணுவ பொலிஸ் தெரிவித்துள்ளது.

நடாலின் கிழக்குப் பகுதியில் உள்ள மே லூயிசா பகுதியில் அந்நாட்டு நேரப்படி 03:00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில்  49 வயதான பெண், அவரது 18 வயதான மகள், மேலும் 57 வயதுடைய இரண்டு பெண்கள் அடங்குவர்.

மேலும் இருவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வெடி விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08