பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதுடன், அதற்காக பணம் செலுத்துவதற்கும் ஜோனஸ் முற்பட்டுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவருக்கான குத்துச்சண்டை போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரேசில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோனஸ் ஜுனிஸ்  ஒலிம்பிக் ஆரம்ப தினத்தின் போது நமீபியா நாட்டின் கொடியை ஏந்தி அணிக்கு தலமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.