ஆரோக்கியமான குடும்பத்தில் அங்கத்தவராக இருக்கும் ஊழியர் ஒருவராலேயே ஆக்கத்திறன்மிக்க உச்ச உழைப்பை தனது நிறுவனத்திற்கு வழங்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு 'ஆசிரி' நல்வாழ்வு மையமானது ஊழியர்களின் சுறுசுறுப்பான மன நிலைக்கு தேவையான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் உட்பட அனைத்து அம்சங்களையும் வழங்கி வருகிறது.

'ஆசிரி' நல்வாழ்வு மையத்தில் ஒவ்வொரு தனி நபர் தேவைக்கு அமைவான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் சிலவற்றை அல்லது அனைத்தையும் நீங்கள் பெற்று பயன் அடைய முடியும்.

1. வோக்கின் தடுப்பு மருத்துவ பொதி

'ஆசிரி' நல்வாழ்வு மையத்தில் மேற்கொள்ளப்படும் வோக்கின் தடுப்பு மருத்துவ பொதி மூலம் அனைத்து வயதினரும் பயன் பெறமுடியும் என்பதுடன் இப்பொதியானது உயர் மட்ட முகாமைத்துவத்திற்கு என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2. நடமாடும் தடுப்பு மருத்துவ பொதி

'ஆசிரி' நல்வாழ்வு மையத்தினால் மேற்கொள்ளப்படும் நடமாடும் தடுப்பு மருத்துவ பொதி மூலம் உங்கள் வேலைத்தளத்தில் குறைந்தளவு இடையூறுகளுடன் இச்சேவை நடத்தப்படும். அத்துடன் உங்கள் வேலைத்தளத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு வயது மற்றும் பால் அடிப்படையில் இச்சேவையை நாம் மேற்கொள்கிறோம். மேலும் 'எதிர்வுகூறல்கள் தடுத்தலுக்கு' வித்திடுகின்றது என்பதற்கு இணங்க எமது ஆய்வுகள் மூலம் நோய்களை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியும் என்பதுடன் இதய, நீரிழிவு, புற்றுநோய் உட்பட பல முக்கிய சோதனைகளை எமது மருத்துவ பொதிகள் உள்ளடக்கியுள்ளமை சிறப்பான அம்சமாகும்.

3. இதயநோய் அபாய காரணிகள் பரிசோதனை

 

 

4. சிடி கொரோனரி அன்ஜியோகிராபி யூசிங் 64 சிலைஸ் வொல்யூம் சிடி ஸ்கேனிங் & கெல்சியம் ஸ்கோரிங் உடன் கூடிய ஆசிரி ஆரோக்கிய இருதய பொதி (Asiri healthy heart package with CT coronary Angiography using 64 slice volume CT scanning & Calcium Scoring)

5. சலுகை விலையில் தலை மற்றும் முள்ளந்தண்டுக்கான MRI காந்த அதிர்வு அலை

6. அண்ட்ரோபாஸ் - ஆண்களின் ஆரோக்கியம்

7. நீரிழிவு நரம்புநோய்கான (Diabetic Neuropathy) பரிசோதனையுடன் கூடிய நீரிழிவு நோய்க்கான பொதி

8. உணவு பண்டங்களைக் கையாள்பவர்களுக்கான ஆய்வு (Food Handlers)

9. உணவுமுறை வல்லுநர்களால் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசனைகள்

10. இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆரோக்கியம்

11. குடும்ப கட்டுப்பாடு

12. மனவள ஆலோசனை

 
 

13. தொழில்சார் ஆரோக்கியம்

14. மரபணு தொடர்பான ஆலோசனைகள்

15. உடலியக்க மருத்துவம் (Physiotheraphy)

16. மறுவாழ்வு

17. விளையாட்டு சார்ந்த வைத்தியம் (Sports therapy)

18. கண் பராமரிப்பு

19. செவிப்புலன் பரிசோதனை (Audiometry )

20. நுரையீரல் செயற்பாட்டுப் பரிசோதனை

21.ஆஸ்மா தடுப்பு மருத்துவ பொதிகள் - சுவாசித்தலில் உள்ள குறைபாடுகளில் இருந்து மீள்வதற்கான சுவாசித்தல் நுட்பங்கள்

'ஆசிரி' நல்வாழ்வு மையத்திற்கு நேரடியாக வருகை தருபவர்களுக்காக சிறப்பான மருத்துவ பொதிகள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கான வயது மற்றும் பால் அடிப்படையில் வேறுபட்ட பொதிகள் ஆகியன உங்கள் பரீசிலனைக்காக இணைக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு, கொழுப்பு, மன அழுத்தம் ஆகியன ஊழியர்களிடம் சாதாரணமாகக் காணப்படும் விடயமாகும். அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள எங்கள் 'ஆசி'ரி நல்வாழ்வு மையமானது அவர்களுக்கு சிறந்த பரிசோதனை மற்றும் வழிகாட்டலை வழங்க தயாராகவுள்ளது என்பதை நாம் ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

உங்கள் நிறுவன ஊழியர்கள் எமது 'ஆசிரி' வைத்தியசாலையின் கீழ்த்தள வாகன தரிப்பிடத்தில் அமைந்துள்ள 'ஆசிரி' நல்வாழ்வு மையத்திற்கு நேரடியாக விஜயம் செய்யமுடியும் என்பதுடன் மருத்துவ பரிசோதனை, மருத்துவ அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் என்பனவற்றை அனைத்து மருத்துவ பொதிகளும் உள்ளடக்கியுள்ளமையை கவனத்தில் எடுக்கவும்.

ஆசிரி வைத்திய சாலை முகவர
இலக்கம் 21,
கிரிமண்டல மாவத்தை,
கொழும்பு - 05

சாதாரண வைத்தியசாலை செயற்பாடுகளில் இருந்து முற்றிலும் அப்பாற்பட்டதாகவும் இனிய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில், வசதியாகவும், இலகுவாகவும் உங்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடியவாறு வேறுபட்ட அலகாக எமது 'ஆசிரி ' மையமானது செயற்படுவதுடன் இப்லீபொடமி, யு/எஸ் ஸ்கேன் மற்றும் ஆலோசனைகள் என்பன அதே இடத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் எங்கள் நடமாடும் சேவையானது அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்களால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள உங்கள் எக்கிளைகளிலும் நடத்தப்படும். குறிப்பிட்ட சில பரிசோதனைகளை உதாரணமாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸர்சையிஸ் ஈசிஜி, 2டி எக்கோ ஆகியவற்ரை தவிர அனைத்தும் எமது நடமாடும் சேவையினால் மேற்கொள்ளப்படும்.

கடந்த 25 வருடங்களாக தேசத்திற்கு சேவையாற்றி வருகின்றோம் என்பதுடன் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் இப்பரிசோதனை நடவடிக்கைகளை நடத்தி, அதன் மூலம் அவர்கள் நேரந்தவறாமை, ஆக்கத்திறன், அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களாக பிரபலமடைந்துள்ளமையை நினைத்து நாம் பெருமை அடைகிறோம்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம்
பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான ஆலோசனைகளைத் தேடும் இளம் தம்பதிகள் மற்றும் தனி நபர்களுக்காக 30 வருட கால அனுபவம் வாய்ந்தவரும் குடும்ப கட்டுப்பாடு சங்கத்தின் முன்னாள் தலைமை வைத்திய அதிகாரியுமான வைத்தியர் சிறியானி பஸ்நாயக்கவின் தலைமையில் இப்பிரிவு இயங்குகின்றது. ஆலோசனைகள் தொடர்பான தகவல்களில் இரகசியத்தன்மை பேணப்படும்.

ஆண்ரோபோஸ் - ஆண்களின் ஆரோக்கியம்
ஆண்ரோபோஸ் உங்கள் சந்தோஷத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால் உளவியல் மற்றும் பாலியல் மருத்துவம் மற்றும் மருத்துவ முகாமைத்துவத்தில் அனுபவம் உள்ள வைத்தியர் லசந்த மலாவிகேவின் - MBBS [Colombo], DIPM [Lond:], Phd [SJP] தலைமையில் இச்சேவை நடத்தப்படுகின்றது.

ஆலோசனை சேவைகள்
சந்தோஷமான வாழ்வுக்கு வைத்தியர் குமாரி செல்லஹேவாவினால் [MBBS] Posgraduate Diploma in Counselling & Psychosocial Work, University of Colombo/ Diploma in Counseling, Sri Lanka Foundation Institute இச்சேவை நடத்தப்படுகின்றது.

1.மன அழுத்தம் மற்றும் கவலை
2.செயற்பாடு தொடர்பான பிரச்சினைகள்
3.நேரம் மற்றும் நெருக்கடி முகாமைத்துவம்
4.உறவுசார் பிரச்சினைகள்

மேற்குறிப்பிட்ட விடயங்கள் மாத்திரமல்லாமல் பரீட்சை, வேலை இழப்பு, வாழ்க்கைமுறை மாற்றம், விவாக சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் குடும்ப உறவு முறைசார் பிரச்சனைகள் தொடர்பான விடயங்களில் அதிக அக்கறை செலுத்தப்படுவதோடு தகுந்த ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

ஆரோக்கிய வாழ்வுக்காக அறிவினை மேம்படுத்தல்
உங்கள் நிறுவன உயர் மட்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் தனிப்பட்ட குழு அங்கத்தவர்கள் ஆகியோரின் அறிவை மேம்படுத்த, அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்குத் தேவையான மருத்துவ விரிவுரைகளை நாம் வழங்கிவருகிறோம். இவ்விரிவுரைகளை எமது கேட்போர் கூடங்களில் அல்லது உங்களுக்கு வசதியான இடங்களில் நடத்த முடியும்.

மேலும் தாய் - சேய் சிகிச்சைப் பிரிவு, சிசு பராமரிப்புப் பிரிவு (குறைப் பிரசவத்தில் பிறக்கும் சிசுக்களைப் பாராமரிக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு) மற்றும் ஆசிரி அதி நவீன இதய பாராமரிப்பு மையம் (அதி நவீன இதய சிகிச்சை மன்றம்) ஆகிய பிரிவுகள் ஊடாகவும் நீங்கள் சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் +94-773444024

இப்படிக்கு
தசரத் ஹெட்டிஆராச்சி,
சந்தைப்படுத்தல் முகாமையாளர்,
ஆசிரி வைத்தியசாலை குழுமம்.
இணையம் - www.asiri.lk
தொலைபேசி +94-11-4524451

Copyright 2008 Asiri Group of Hospitals Ltd. All rights reserved