சட்ட சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை

LIVE BLOG
 • 2016-07-30 13:18:49

  ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு வரையிலான பகுதியில் கட்டுபடுத்த பேலியாகொடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார்.

 • 2016-07-30 10:16:13

  அரசுக்கு எதிரான பாதயாத்திரை மூன்றாவது நாளான இன்று காலை கேகாலை நெலுந்தெனிய பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

 • 2016-07-30 09:19:54

  நாட்­டு­ மக்கள் ஆட்­சி ­மாற்­றத்­தையே விரும்­பு­கின்­ற­னர். அதன் வெளிப்­பாடு பாத­யாத்­திரை ஊடாக உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் உண்­மையை வெளிப்­ப­டுத்த விடாது ஊட­கங்கள் மிகவும் மோச­மான முறை யில் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ள­ாக்­கப்­ப­டு­கின்­றன என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

 • 2016-07-29 17:59:25

  கொட்டும் மழைக்கு மத்தியில்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று மாலை 6.10 மணியளவில் கேகாலை நெலுந்தெனிய வரை சென்றடைந்தது. 

  இன்றைய பேரணியின் போது கேகாலை நகரில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தன்சலும் வழங்கப்பட்டது.

 • 2016-07-29 13:36:33

  அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதயாத்திரைக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

 • 2016-07-29 11:41:06

  குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 • 2016-07-29 11:39:32

   மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பு நோக்கிய இரண்டாவது நாள் பாதயாத்திரை மாவனல்லை நகர எல்லையில் உள்ள உதுவன்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

 • 2016-07-29 11:12:10

  மஹிந்த அணி யாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது

 • 2016-07-29 09:25:09

  எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு   செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளமுடியாதுபின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னைவியக்கவைத்துவிட்டுள்ளதுஎனமுன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ கொழும்பைநோக்கியபாதயாத்திரையைஆரம்பித்து சூளுரைத்தார்.

 • 2016-07-28 17:42:03

  பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளது.

 • 2016-07-28 17:05:00

  பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல் 

  பாதயாத்திரையின் போது விகாரைக்கு முன்னால் உள்ள வீதியால் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 • 2016-07-28 15:56:31

  கடுகண்ணாவ பள்ளத்தை வந்தடைந்தது பேரணி : மாவனெல்ல எல்லையில் பொலிஸார் குவிப்பு  

 • 2016-07-28 13:00:12

  நாமல் ராஜபக்ஷ உட்பட ஐந்து பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • 2016-07-28 12:36:12

 • 2016-07-28 12:34:46

  பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை யாராலும் தடுக்க முடியாது என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

 • 2016-07-28 11:03:58

  சற்றுமுன்னர் பேராதெனியவில் ஆரம்பமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரையால் பிலிமத்தலாவ பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

 • 2016-07-28 10:10:51

  பாதயாத்திரையை கண்டி நருக்கு வெளியில் பேராதெனிய பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 • 2016-07-28 10:10:38

  மஹிந்த ராஜபக்ஷ பேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 • 2016-07-28 09:33:01

  ஒன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.

 • 2016-07-28 09:08:02

  நீதிமன்றங்களின் உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

 • 2016-07-28 08:51:43

  அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணியை ஆரம்பிப்பதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

  தற்போது பேராதெனிய ஹெட்டம்பே விகாரைக்கு முன்பாக கூடியுள்ள பாதயாத்திரையில் ஈடுபடுவோரை அவ்விடத்தை விட்டு அகலுமாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Horoscope